காற்றில் பறந்த விமானமும், நிதானமும்

 ஒரு முறை விமானத்தில் இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த போது என்னைப் போல் நிதானத்தை காற்றில் விடும் மனிதர் ஒருவரை காண நேர்ந்தது. அன்று வரை, எனக்கு கண்டதற்கு கோபம் வருகிறது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த மனிதர் நம்மளையும் மிஞ்சி விட்டார். கொதிக்கும் எண்ணையில் தண்ணீர் தெளித்த மாதிரி வெடித்துக் கொண்டே இருந்தார் எப்போதும்.
 
விமானத்தினுள் ஏறி எனது இருக்கையில் அமர்ந்து ஆறுதலாயிருக்கையில் பணிப்பெண்ணுடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டே வந்தமர்ந்தார் மனிதர். அவள் காட்டிய இருக்கையில் புரியாத மொழியில் ஏதோ திட்டியடி உட்கார்ந்தார், பணிப்பெண் காட்டிய இருக்கையில்.

விமானம் பறக்கத் தொடங்கியது. எமது இருக்கைகளுக்கு சற்று பின்னால் இருந்து ஒரு குழந்தை வீரிட்டு அழத் தொடங்கியது. அமுக்க வித்தியாசத்தில் காது நோகத் தொடங்கியிருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

திடீர் என பயங்கர சத்தமாய் புரியாத ஒரு மொழியில் ஒரு பெருஞ் சத்தம் எனக்குப் பின்னால் கேட்டது. திரும்பிப் பார்த்தேன் நானும், மற்றவர்களைப் போல. அந்த மனிதர் தனது இருக்கையை விட்டடு எழும் அந்தக் குழந்தையை நோக்கி ஏதோ சொல்லி கத்தியபடியே உட்கார்ந்தார். இவரின் சத்தம் குழந்தைதையை இன்னும் கஸ்டப்படுத்தியதோ என்னவோ அது முன்னிலும் அதிகமாய் வீரிட்டது.

பணிப் பெண்கள் இருவர் வந்தனர். ஏதோ பேசினர். குழந்தை முன்னிலும் வீரிட்டது. நம்ம கதாநாயகனை திரும்பிப் பார்த்தேன் இரு கைகளாளும் காதை பொத்திக் கொண்டு தலையை ஆட்டிக்கொண்டு இருந்தார். திடீர் என மீண்டும் எழுந்து ஏதோவெல்லாம் தனது மொழியில் திட்டினார். பின் விறு விறு தனது உடமைகளை எடுத்துக் கொண்டு போனார். அப்பாடா இந்த மனிசனின் தொல்லை துலைந்தது என்று நினைப்பதற்கிடையில் பணிப்பெண் அவரை அழைத்து வந்து இது தான் உங்கள் இருப்பிடம் என்றும் விமானத்தில் வேறு இடம் இல்லை என்றும் சொல்லி அவரை அதே இடத்தில் இருத்தினாள். இதற்கிடையில் குழந்தை தூங்கிப் போயிருந்தது. மனிதரும் ஏதோ புறுபுறுத்தபடியே உட்கார்ந்தார்.

உணவு வந்தது. சாப்பி்ட்டு ஆறுதலாக ஒரு படம் பார்த்தடியே என்னை மறந்திருந்தேன். எனக்குப் பின்னால் மெதுவாய் ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியது. அதை நான் பெரிதாய் கவனிக்கவில்லை. நேரம் போக போக சத்தம் பெருஞ்சத்தமாகிய போது தான் தரும்பிப் பார்த்தேன். அந்த மனிதர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். எனக்குள் இருந்த மிருகம் சற்றே உறுமத் தொடங்கியிருந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டேன்.

சத்தியமாய் சொல்லுகிறேன் வீட்டுக் கூரையை தூக்கி துக்கி போடுமளவுக்கு குறட்டைவிடும் மனிதர்களுடன் தூங்கியிருக்கிறேன். ஆனால் இம் மனிதரின் குறட்டையின் ராகமும், ஓலியின் அளவும் தாங்கமுடியாததாய் இருந்தது. பலரும் முகம் சுளித்தனர். அவருக்கு பக்கத்தில் இருந்தவர் நிலையைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது.

ஒருவர் பணிப் பெண்ணை அழைத்து ”இம்சையை” காட்டினார். அவர் சிரித்தபடியே ஒரு ஆண் சிப்பந்தியை அழைத்து வந்து எமது கதாநாயகனை எடுப்பினாள். மனிதர் எழும்பினார். பேந்தப் பேந்தப் முளித்தார். எல்லோரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் சற்று அமைதியடைந்தார். அந்த ஆண் சிப்பந்தி ஆங்கிலத்தில் உங்கள் குறட்டை ஒலி மற்றவர்களை குழப்புகிறது என்றார். அவருக்கு புரியவில்லை. சிப்பந்தி மெதுவாய் குறட்டை ஒலியெழுப்பி வாயில் விரலை வைத்து உஷ்ஷ்ஷ் என்று காட்டியதும் ஏதோ புறுபுறுத்தபடியே அமர்ந்திருந்தார், மனிதர்.

விமானம் உயரே பறந்து காற்றைக் கிழித்துக் கொண்டிருந்தது.

அந்தக் குழந்தை துக்கம் கலைந்து மீண்டும் அழுகையை ஆரம்பித்தது. பெருங்குரலெடுத்து அழுதது. நம்ம மனிதர் பொறுமையை மீண்டும் காற்றில்விட்டார்.

அன்று நாம் மத்தியகிழக்கு நாடொன்றில் இறங்கும் வரை மனிதர் பல தடவைகள் அக் குழந்தையை நோக்கி தனது மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அக் குழந்தை இவரை மறந்து தன்னிஸ்டத்துக்கு கத்திக் கொண்டிருந்தது. அம் மனிதர் தான் தூங்கிய போதெல்லாம் குறட்டையில் எம்மை கொன்று கொண்டிருந்தார்.

விமானத்தில் இருந்து இறங்கிய பின்னும் மனிதர் என் நினைவுகளில் சுற்றியபடியே வந்து ஏன் அவர் இப்படி நடந்து கொண்டார் என்று சிந்திக்கவைத்தார். இருப்பினும் இறுதிவரை அவரின் கோவத்திற்கான காரணம் புரியவில்லை. அதே மாதிரி அவர் மீது எனக்கு வந்த கோவத்திற்கும் நியாயமான காரணங்கள் ஏதும் தெரியவில்லை.

சகிப்புத்தன்மையை இழந்து கொண்டிருக்கிறோமா என கேட்டுக்கொண்டிருந்தது, என் மனது.


.

6 comments:

  1. அவர் ஏதாவது மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவராக இருப்பார் என நினைக்கிறேன். இல்லையேல் ஒரு குழந்தையின் அழுகைக்ககு இவ்வளவு தடபுடல் பண்ணியிருக்கமாட்டார்.

    அல்லது உங்கள் எல்லோரதும் மனநிலையையும் சோதித்துப் பார்த்தாரா?

    ReplyDelete
  2. இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

    ReplyDelete
  3. முதலில் எனது வலைப்பதிவிற்கு வந்து சென்றமைக்கு நன்றி. இந்தப் பதிவு நீங்கள் நினைப்பதுபோல சகிப்புத்தன்மையை இழந்துகொண்டிருக்கிறோம் என்றாலும் இப்படி நடந்துகொள்வதற்கு அவரது இயலாமையோ அலல்து அன்றைய தின ஆரம்பமோ காரணமாயிருக்கலாம்..

    நன்றாய் எழுதுகிறீர்கள்.. மொக்கைகளின் உலகத்தில் சில உருப்படியான வலைப்பதிவுகள்.. நன்றி

    ReplyDelete
  4. சிலருக்கு சகிப்புத்தன்மையை கடைபிடிக்க் தெரியவில்லை குழந்தை தானே என்று சகிக்கவும்கற்றுக் கொள்ள வேண்டும். தன குற்றம் தாக்கு தெரியாது என்பார்கள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. உங்கள் பின்னூட்டங்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பர்களே.

    ReplyDelete

பின்னூட்டங்கள்